Advertisment

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபாலன் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

charge sheet in Teacher Rajagopalan case

சென்னை கே.கே நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் ஆன்லைன் வகுப்பில் வரம்பு மீறி நடந்து கொண்டது போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்தஜூலை மாதம்24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

Advertisment

இப்பள்ளியில் ஏற்பட்ட இந்த பாலியல் அத்துமீறல் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதேபோல் தமிழகம் முழுவதும் ஆசிரியர்களால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான மாணவிகள், முன்னாள் மாணவிகள் தங்களது புகார்களை காவல்துறைக்குத் தெரிவித்த நிலையில் அதன் அடிப்படையில் பலர் போக்சோ சட்டத்தில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இன்று இந்த குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர்.

Advertisment

highcourt police teachers
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe