Charge sheet on pen drive; Criminals who refuse to buy

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி (05.07.2024) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை வழக்கில் ரவுடிகள், அரசியல் கட்சி நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் 30 பேர் மீது குற்றப்பத்திரிக்கையானது 03.10.2024 அன்று தாக்கல் செய்யப்பட்டது.இந்த குற்றப்பத்திரிக்கையின் படி ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரனும், ஏ2 குற்றவாளியாக சம்போ செந்திலும் இடம் பெற்றுள்ளனர்.

Advertisment

அதில், “ஆம்ஸ்ட்ராங்கின் வளர்ச்சியைத் தடுக்கவே இந்த கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் அசுர வளர்ச்சியே கொலைக்குத் தூண்ட முக்கிய காரணமாக உள்ளது. அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக வளர்ந்து வந்த ஆம்ஸ்ட்ராங்கை ஒடுக்கவே கொலை செய்யப்பட்டார். இதற்காக 6 மாதங்கள் திட்டமிட்டு ‘ரெக்கி ஆப்ரேஷன்’ நடத்தி ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு மொத்தமாக ரூ.10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது' என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு அஸ்வதாமன், சம்போ செந்தில், ரவுடி ஆற்காடு சுரேஷ் ஆகியோருடனான முன் விரோதங்களும் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணமாக உள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை போலீசாரால் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள 28 பேருக்கும் 5000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கொடுக்க காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.சிறையில் உள்ளவர்களுக்கு பென்டிரைவ் வடிவில் குற்றப்பத்திரிக்கையை வழங்க போலீசார் முடிவெடுத்தனர். ஆனால் சிறையில் உள்ளவர்கள் குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்துள்ளனர். சிறையில் மின்னணு பொருட்களை பயன்படுத்த முடியாது என்பதால் குற்றவாளிகள் தங்களுக்கு கொடுக்கப்படும் குற்றப்பத்திரிக்கையைபடிக்க முடியாது என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மொத்தம் ஐந்து ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை சிறையில் உள்ள 28 பேருக்கும் நகலெடுத்து கொடுக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய் செலவாகும், இதற்காக ஒரு லட்சத்து 40 ஆயிரம் காகிதங்கள் அச்சடிக்கப்படும் என போலீசார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்தநிலையில் கைதான 27 பேருக்கு நீதிமன்ற காவலை 14ஆம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment