Charan, the youth who destroyed the school bus with a tractor!

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் வன்முறையின் போது, பள்ளிப் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்துச் சேதப்படுத்திய இளைஞர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பள்ளி மாணவி உயிரிழந்ததைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் 11- ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பள்ளியின் பேருந்தை டிராக்டர் மூலம் இடித்து சேதப்படுத்தப்பட்ட வீடியோவும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சின்னசேலத்தைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர் பள்ளி பேருந்தை டிராக்டர் மூல சேதப்படுத்தியது தெரிய வந்தது. எனினும், அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டு, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், நீதிபதியின் உத்தரவின் பேரில், நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisment

வன்முறையில் ஈடுபட்டதாக ஏற்கனவே 341 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.