Advertisment

புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி.க்கு பதில் பொ.ஆ.மு.வாக மாற்றம்! விமர்சனங்கள் எழவில்லை: மாஃபா பாண்டியராஜன்

புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி. என்ற வார்த்தை மாற்றப்பட்டது குறித்து எந்தவித புகார்களும் வரவில்லை என தொல்லியல் மற்றும் தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தி.நகரில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

வல்லுநர் குழுவின் பரிந்துறையின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் கி.மு., கி.பி. என்பதற்கு பதில் பொ.ஆ.மு., (பொது ஆண்டுக்கு முன்), பொ.ஆ.பி. (பொது ஆண்டுக்கு பின்) என குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டதற்கு இதுவரை எந்த எதிர்ப்பும் வரவில்லை. அப்படி ஏதேனும் விமர்சனங்கள் வரும் பட்சத்தில் மாற்றியமைப்பது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

mafoi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe