tasmac shop

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் ஏற்கனவே காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்த நிலையில் அந்த நேரமானது மாற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கரோனா ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துவருகிறது. டாஸ்மாக் கடைகள் கடந்த ஜூலை 5 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருந்த நிலையில், கரோனா பரவலுக்கு முன்பு இருந்தது போன்றுமதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என டாஸ்மாக் துறையின் மேலாண் இயக்குனர் சுப்பிரமணியன் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.