Change of Suburban Bus Route for Public Interest - Commissioner of Police Order

Advertisment

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் பொதுமக்கள் நலன்கருதியும், வாகன ஓட்டிகள் வசதிக்கேற்ப சாலை போக்குவரத்தில் பல மாறுதல்கள் செய்தும், விபத்துக்கள் ஏற்படுவதைத்தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

கடந்த 5 வருடங்களாக கரூர் பைபாஸ் சாலை, சாஸ்திரிரோடு வழியாக மத்திய பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் உக்கிரகாளியம்மன் கோவில் அண்ணாநகர், ஸ்டூடன்ட் (Student) சாலை, MGR சிலை, நீதிமன்றம், வ.உ.சி சிலை, மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை, ரெனால்ட்ஸ் ரோடு வழியாக மத்திய பேருந்து நிலையத்திற்கு சுற்றி சென்று கொண்டிருக்கின்றன.

Change of Suburban Bus Route for Public Interest - Commissioner of Police Order

Advertisment

காவல் ஆணையர் நேற்று 20.12.21ந் தேதி போக்குவரத்து சீரமைப்பு சம்பந்தமாக MGR சிலை அருகே போக்குவரத்து வழித்தடத்தை பார்வையிட்டு, நீதிமன்றம் வழியாக சுற்றி சென்று கொண்டிருந்த புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்களை, MGR சிலை ரவுண்டானா, ஐயப்பன்கோவில், லாசன்ஸ் ரோடு, வெஸ்டரி பள்ளி ரவுண்டானா வழியாக நேரடியாக மத்திய பேருந்து நிலையம் சென்றடைய பொதுமக்கள் நலன்கருதி போக்குவரத்து வழித்தடம் மாற்றம் செய்து ஆணையிட்டார்கள்.

மேற்கண்ட போக்குவரத்து வழித்தடம் மாற்றம்பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மறுபடியும் 21.12.21ந் தேதி இன்று MGR சிலை ரவுண்டானா சென்று சீர்செய்யப்பட்ட போக்குவரத்து மாற்றத்தில் புறநகர் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் சரியாக செல்கின்றவா, ஏதேனும் போக்குவரத்து குறைபாடுகள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்களின் குழந்தைகள் 11 நபர்களுக்கு கல்வி உதவி தொகையும், 43 காவல் ஆளிநர்களின் குடும்பங்களுக்கு இறுதிசடங்கு உதவி தொகையும் வழங்கினார்கள்.

Change of Suburban Bus Route for Public Interest - Commissioner of Police Order

Advertisment

மேலும் காவல் ஆணையர் காவலரின் குடும்பங்களுக்கிடையே பேசுகையில், "எல்லா குழந்தைகளும் நன்றாக படிக்கவேண்டும் எனவும், கடமையும் முக்கியம், குடும்பமும் முக்கியம் எனவும், கடமையும் குடும்பமும் இருகண்களாகப் பார்க்கவேண்டும்” அறிவுரைகள் வழங்கி, காவலரின் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.