Skip to main content

மாவட்ட செயலாளரை மாற்றுங்கள் எடப்பாடி காலில் விழுந்து கெஞ்சிய கட்சிக்காரர்கள்!

Published on 18/06/2018 | Edited on 18/06/2018

 தற்போது உள்ள சூழ்நிலையில் தங்கதமிழ்செல்வம் தன்னுடை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாம செய்வேன் என்று அறிவிப்பு கொடுத்ததை போல மற்ற எம்.எம்.எல்.ஏகலையும் ராஜினாமா செய்யச் சொல்லி டி.டி.வி தரப்பில் இருந்து முயற்சி நடந்தாகவும் இதற்கு எம்.எல்.ஏக்கள் யாரும் உடன்பாடு ஏற்படாததால் டி.டி.வி. தினகரன் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பயன்படுத்தி அந்த அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுப்பதற்கு ஆளும் அ.தி.மு.க. தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பொறுப்பை மூத்த அமைச்சர்கள் மற்றும் எம்.பியும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4 பேரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 

edappadi

 

 

 

அந்த மூத்த அமைச்சர்கள் கடந்த 2 தினங்களாக டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் ஆதரவு கரம் நீட்டினால் தங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுப்பதாகவும் உத்திரவாதம் அளித்தனர்.

அ.தி.மு.க. வட்டாரத்தில் இது பற்றி விசாரித்த போது டி.டி.வி. தினகரன் அணியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் அணி மாறுவதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே அந்த 8 எம்.எல்.ஏ.களையும் அழைத்து வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகையின் போது  இன்று காலை சந்திக்க வைக்க ஒரு சாரார் ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்கள் என்கிற தகவல் மெல்லக் கசிந்து திருச்சி விமான நிலையமே பெரிய பரபரப்பில் திளைத்தது. 

 

 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இன்று மாலை காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம் நடக்கிறது.  இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு 12.15 மணிக்கு வந்தார். 

டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையக்குழு விழிப்புணர்வு கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்தும் குழுவுக்கு தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கர்நாடகா இன்னும் உறுப்பினர்களை நியமிக்காமல் உள்ளது.

 

எனவே உடனடியாக நியமித்து, கூட்டத்தைக் கூட்டி தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. விரைவில் அணை நிரம்பி விடுமென எதிர்பார்க்கிறோம். 90 அடி நிரம்பியவுடன் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்கதமிழ்செல்வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யார் வேண்டுமானாலும் மீண்டும் அ.தி.மு.க.வில் சேரலாம். அது மிகவும் பாராட்டுக்குரியது. அவர்கள் மீண்டும் அமைச்சர் பதவி என்பது எப்படிக் கொடுக்க முடியாது. உங்களுக்கு எல்லாமே தெரியும் சட்டப்படி அனைத்தும் நடக்கிறது என்றார். 

 

பத்திரிகையாளர்கள் பேட்டி முடிந்தவுடன்  திருச்சி விமானநிலையம் உள்ளே இருந்து வெளியே வரை திறந்த வெளியிலே நடந்தே திருச்சி எம்.பி.குமார் சார்பில் ஏற்பாடு செய்திருந்த திருநங்கைகள் வரவேற்பு, திருச்சி மகளிர் அணியினர் வரவேற்பு, மற்றும் வெள்ளைக்குதிரைகள் வரவேற்பு என்று பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். திருச்சியில் உள்ள இரண்டு அமைச்சர்கள்  முதலமைச்சர் காரில் இடம் பிடிக்கும் போட்டியில் 3 பேரும் அமர்ந்து காரில் பவனி வர முதலமைச்சர் பழனிச்சாமி எம்.பி.குமாருடன் நடந்தே அனைத்து வரவேற்புகளை ஏற்றுக்கொண்டே நடந்து வர திடீர் என துறையூர் மற்றும், லால்குடியில்  இருந்து வந்த கட்சிக்காரர்கள் முதலமைச்சர் காலில் விழுந்தனர்.

 

edappadi

 

பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் உடனே பாய்ந்து சென்று தடுக்க எங்க மாவட்ட செயலாளர் எம்.பி. ரத்தினவேலை மாற்றுங்கள். அவர் கட்சிக்காரர்களிடமே பணம் கேட்கிறார். எந்த வேலையைக் கேட்டாலும் கட்சிக்காரர்களிடம் பணம் கேட்கிறார். அவரை மாற்றாவிட்டால் திருச்சி புறநகர் மாவட்டமே காலியாகிவிடும். திருச்சி மாநகருக்கு எப்படி சுறுசுறுப்பாக செயல்படும்?  மாவட்ட செயலாளர் குமாரை நியமித்து போல புறநகருக்கு ஒருவரை நியமனம் செய்யுங்கள் என்று ஆவேசமாகக் கத்த... உடனே முதல்வர் சரி.. நா என்னான்னு உடனே கவனிக்கிறேன் என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தார். 

எல்லோர் முன்னிலையிலும் திருச்சி புறநகர் மாவட்ட எம்.பி. ரத்தினவேலை மாற்ற வேண்டும் என்று பொதுவெளியில் குற்றச்சாட்டு வைத்தது எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்தது. 

 

தினகரன் 8 எம்.எல்.ஏக்கள் முதல்வரை திருச்சியில் சந்திக்கிறார் என்கிற புரளி வேகமாக பரவி கொண்டுயிருந்த நிலையில் அது உண்மை இல்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் பேட்டியின் மூலம் உறுதியானாலும். உண்மையில் திருச்சி மாநகர  மாவட்ட செயலாளர் குமார்.. திருச்சியில் மாநகர தினகரன் அணியை சேர்ந்த ஜங்சன் பகுதி செயலாளர் ஞானசேகரனை விமானநிலையத்திற்கு அழைத்து வந்து முதல்வர் முன்னிலையில் சேர்த்தார். இன்று மாலை ஏர்போட் வயர்லஸ் ரோட்டில் பிரமாண்ட பொதுகூட்டத்தில் 300 பேருடன் பகுதி செயலாளர் ஞானசேகரன் இணைகிறார். 
 

 

 

சார்ந்த செய்திகள்