தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிற சூழ்நிலையில், தளர்வு விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று (12.04.2021) சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கரோனா தொடர்பாக அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறையினர், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் இன்று மதியம் 12 அளவில் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா பாதிப்பு கடந்த 7 நாட்களில் 6.3% வரை அதிகமாக பதிவாகியிருக்கிறது.
நேற்று சுகாதரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, கிட்டதட்ட 7 மாதங்களுக்குப் பின்பு 6 ஆயிரத்திற்கு மேலானவர்களுக்குப் பரவியிருப்பதாக பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்கும்நடவடிக்கைகளைஅரசு எடுக்க உள்ளது. ஏற்கனவே சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், இன்று நடக்கும் ஆலோசனையில் வேறு முடிகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி கல்லூரிகளின் விடுதிகளில் கரோனா முகாம்கள் அதிகரிப்பது குறித்தும், இரவுநேர கட்டுப்பாடுகள் குறித்தும், டாஸ்மாக் திறப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் மட்டும் சுகாதாரத்துறை ஆலோசனையின்படி முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/meet-2.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/meet-1.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/meet-3.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/meet-4.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2021-04/meet-5.jpg)