Change in alliance position Edappadi Palaniswami sensational response

விருதுநகரில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக இன்று (10.11.2024) பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியைக் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் முதல்வர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்குப் பதிலளிக்கும் வகையில் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்துசெய்தியாளர்கள், ‘ஒருவர் கூட்டணிக்கு பாமகவையும், பாஜகவையும் வரவேற்க கதவைத் திறந்து வைத்துள்ளீர்களா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துப் பேசுகையில், “அதிமுகவைப் பொறுத்தவரையில் கூட்டணிக்காகக் கதவைத் திறந்து வைத்திருப்பது, மூடி வைத்திருப்பது இல்லை. அது மற்ற கட்சிகளில் உள்ளது.

Advertisment

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, இலஞ்சம், லாவண்யம் இல்லாத ஆட்சியை அமைப்போம். அதிமுக கொள்கையின் அடிப்படையில் விருப்பப்பட்டு வருபவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சி தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலைப் பொறுத்துத் தான் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். அப்போது தான் யாருடன் யார் தலைமையில் கூட்டணி எனத் தெரியவரும்” எனத் தெரிவித்தார். முன்னதாக பாஜகவுடன் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.