Chandrasekhar Appointed as President of Tamil Nadu Science, Music and Drama Council

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக நடிகரும், முன்னாள் திமுக எம்எல்ஏவுமான வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். தற்பொழுது தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக உள்ள இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் இந்த நியமனம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்போடு தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வாகை சந்திரசேகர் கவனிப்பார் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1980-களில் துணை நடிகராக பணியாற்றிய வாகை சந்திரசேகர் அதன் பிறகு தொடர்ந்துபல்வேறு படங்களில் முக்கிய வேடங்களிலும் கதாநாயகனாகவும்நடித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக சார்பில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.