Chandrababu Naidu's letter to Tamil Nadu Chief Minister MK Stalin!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று (24/05/2022) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

அந்த கடிதத்தில், "தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா- தமிழகம் எல்லைப் பகுதியான சித்தூர் மாவட்டத்தின் வழியாக ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. அதேபோல், வாணியம்பாடி, தும்பேரி, பேர்ணாம்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருந்தும் ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலுக்கு இரு சக்கர வாகனங்கள் முதல் லாரிகள் வரைப் பயன்படுத்தப்படுகின்றன. தனது குப்பம் தொகுதிக்கு வரும் ரேஷன் அரிசி கடத்தல் வாகனங்களை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர்.

Advertisment

இதனால் தனது குப்பம் தொகுதியில் மட்டும் 16 மாதங்களில் 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்படும் ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து ரூபாய் 40- க்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் விற்பனை செய்கின்றனர். எனவே, தமிழகம் மற்றும் ஆந்திரா மாநில எல்லைகளில் அதிகளவில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் அரிசிக் கடத்தப்படுவதை உடனடியாக தடுக்க வேண்டும். ரேஷன் அரிசி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" குறிப்பிட்டுள்ளார்.