திமுக தலைமை அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் நெருங்கிய உறவினர் திருமணத்திற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு இன்று தமிழகம் வர இருக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இன்று மதியம் 2.30 மணிவாக்கில் சென்னை வர இருக்கிறார். திருமண நிகழ்விற்காக இந்த வருகைஇருந்தாலும் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடு வரவிருப்பது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல் சென்னையில் இன்று திமுக மூத்த நிர்வாகிகளையும் சந்திரபாபுநாயுடு சந்திக்க இருக்கிறார். ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபுநாயுடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும்நல்ல நட்பு இருந்து வருகின்ற நிலையில் இந்த வருகையானது முழுக்க முழுக்க திருமண நிகழ்வுக்கானது என்று கூறப்பட்டாலும், திமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிமற்றும் பல மூத்த திமுகநிர்வாகிகளை சந்திக்க உள்ளார் சந்திரபாபுநாயுடு என்பது கூடுதல் தகவல்.