Advertisment

“மிக கனமழைக்கு வாய்ப்பு” - ஆரஞ்ச் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

publive-image

Advertisment

மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வந்தன. அத்தோடு தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியது. மேலும் 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு இந்தக் கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. அதே சமயம் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததாலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (14.05.2024) மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. அதே சமயம் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டிற்கு 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kanyakumari rain
இதையும் படியுங்கள்
Subscribe