Skip to main content

‘மிக கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை மையம் எச்சரிக்கை!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
'Chance of very heavy rain' - Meteorological Center warns

தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த ஒரு சில வாரங்களாக கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழையும் பொழிந்து வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது.

இது வட கிழக்கு திசையில் நகர்ந்து வரும் 24 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதாவது இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வடகிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும். அதே சமயம் இந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி வராது என்றாலும் தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பில் இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (22.05.2024) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழையும், 21 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களில்  மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படுகிறது. மேலும் தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் நாளை (23.05.2024) கனமழை பெய்ய வாய்ப்பு” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

18 மாவட்டங்களில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Chance of rain till 10 am in 18 districts

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை நீடித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024)  மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதோடு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இரவு பத்து மணி வரை தமிழகத்தில் பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தேனி, விருதுநகர், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, கரூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேனியில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, கோட்டூர், சீலையம்பட்டி, சின்னமனூர், கம்பம், கூடலூ,ர் லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

Next Story

மலையரசி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்'; மூழ்கிய முக்கிய தரைப்பாலம்

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
 'Red Alert' for Malayarasi District; Sunken Mayaru footbridge

தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை நீடித்து வரும் நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மாவட்டத்தில் இன்று (17.07.2024)  மிக கனமழை முதல் அதிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளதோடு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மலையரசி மாவட்டம் என வர்ணிக்கப்படும் நீலகிரியில் நேற்று முன்தினம் காலை முதலே பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக மயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தெப்பக்காடு தரைப்பாலம் தரையில் மூழ்கியுள்ளது. ஆற்றில் மரம் மற்றும் மூங்கில் துண்டுகள் அடித்து வருவது போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக மசனகுடி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரெட் அலர்ட் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை முகாம்களுக்கு இடம் மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.