21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

nn

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கடலூர், புதுக்கோட்டை, அரியலூர், விருத்தாசலம், தருமபுரி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் சுட்டெரித்துவரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. அதே போல் தருமபுரி, அரூர், வள்ளிமதுரை, கௌகம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பொழிந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பொழிந்து வருகிறது. கடலூரை பொறுத்தவரைபெண்ணாடம், விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது.

rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe