Published on 16/01/2022 | Edited on 16/01/2022

தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிளவக்கல்- 5 செண்டிமீட்டர் மழையும், தென்காசி- 4 செண்டிமீட்டர் மழையும், ஆரணி, பள்ளிப்பட்டு ஆகிய இடங்களில் தலா 3 செண்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.