Advertisment

‘பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

'Chance of rain with strong winds' - Meteorological Department warns

Advertisment

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ். கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும்படி தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தமிழகத்திற்கு தொடர்ந்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் தமிழகத்தில் நேற்று (04.05.2024) முதல் கத்தரி வெயில் தொடங்கியுள்ளது. வரும் 28 ஆம் தேதி வரை என 25 நாட்களுக்கு இந்த கத்தரி வெயில் நீடிக்க உள்ளது. கத்தரி வெயில் காலத்தின் முதல் 7 நாட்களுக்கு வெப்பம் அதிகளவில் இருக்க வாய்ப்புள்ளது என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (05.05.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தில் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் மே 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

rain summer
இதையும் படியுங்கள்
Subscribe