Advertisment

சென்னையில் மழைக்கு வாய்ப்பு!

Chance of rain in Chennai

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வந்துள்ளது.

Advertisment

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாளைக்குள் (19.12.2024) வலுப்பெற்று மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (18.12.2024) வெளியிட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று காலை 10 மணிக்குள் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

முன்னதாக வெளியிடப்பட்டிருந்த மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், ‘சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுகிறது. அதோடு வடகடலோர மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe