/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rain hggh_34.jpg)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " தமிழகத்தில், ஈரோடு, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்டமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடியமழைக்கு வாய்ப்பு உண்டு.
சென்னையைப் பொருத்த வரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வாய்ப்பிருக்கிறது" என கூறப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பு வட மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)