Advertisment

8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 Chance of rain in 8 districts

Advertisment

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் அங்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. அதேபோல் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் மழை பொழிந்து வருகிறது. இன்று எட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து எட்டாயிரம் கன அடியாக குறைந்துள்ளது. முன்னதாக நீர்வரத்து 12 ஆயிரம் கனஅடி என இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து எட்டாயிரம் கரடியாக நீர் வரத்து குறைந்துள்ளது. வைகை அணையில் இருந்து 3,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இன்று முதல் ஒரு வாரத்திற்கு வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஜூலை 1ஆம் தேதி வரை மொத்தம் 1,251 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வைகை பூர்வீக பாசனப்பகுதி ஒன்று மற்றும் இரண்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகையில் இருந்து 3000 கனஅடி நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை மாவட்ட நிர்வாகம் கொடுத்துள்ளது .

HEAVY RAIN FALL weather
இதையும் படியுங்கள்
Subscribe