Chance of rain in 8 districts

தமிழகத்தில்கோடைகாலம்காரணமாகபரவலாககோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை பொழிந்து வருகிறது. அதே சமயம் தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் (17.05.2024) முதல் வரும் 20 ஆம் தேதி வரை (நாளை) என அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே சிவப்பு நிற எச்சரிக்கையை விடுக்கப்படுகிறது. அதே சமயம் மே 21 ஆம் தேதி (நாளை மறுநாள்) வரை தமிழ்நாட்டில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் மணிக்கு 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதே போன்று கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் ஆரஞ்ச் அலர்ட்விடுக்கப்படுகிறது. கேரளாவில் 20 ஆம் தேதிஅதிகனமழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று (19.05.2024) காலை 10 மணிக்குள் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனக் கணிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.