Advertisment

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Chance of rain in 7 districts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும். மேலும் ராணிப்பேட்டை சென்னை, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

kanchipuram Chengalpattu Chennai weather rain
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe