Advertisment

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Chance of rain in 6 districts

Advertisment

6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பின்படி கோயம்பேடு, அடையாறு, கிண்டி, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, தரமணி, ஆவடி உள்ளிட்ட சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் என பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மிதமான மழை பெய்தது. அதே போன்று திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ததது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூறைக்காற்று இடி, மின்னலுடன் கூடிய மழை விட்டு விட்டு பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் 5 சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகள் புறப்படுவதிலும், தரையிரங்குவதிலும் தாமதம் ஏற்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

weather rain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe