6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Chance of rain in 6 districts

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரக்கூடும்.இது மத்திய கிழக்கு, அதை ஒட்டிய அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெறக்கூடும். இது மத்திய அரபிக்கடலில் அக்டோபர் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe