வெப்பசலனத்தால் தமிழகத்தில் கடலூர் உள்பட 5 மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது, இமயமலை அடிவாரப்பகுதியில் பருவமழை தாழ்வுநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை கிடைத்து இருக்கிறது. இந்த சூழல் காரணமாகவும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
குறிப்பாக வட கடலோர மாவட்டங்கள், தெற்கு மற்றும் வடக்கு உள்மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் கடலூர், விழுப்புரம், வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என்று தெரிவித்தனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });