
தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 'அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூரில் மழைக்கு வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், அரியலூர், கடலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, கரூர், நாகை, நாமக்கல், திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருப்பூர், கோவையிலும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஓடிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செய்யாறு மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல் விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது லேசான மழை பெய்து வருகிறது.