Chance of rain in 25 districts Postponement of exams

Advertisment

தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் சின்னம் நாகையில் இருந்து 470 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 670 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனையொட்டி கடலூர், மயிலாடுதுறையில் இன்று (27.11.2024) அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவே ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் கனமழை எதிரொலியாகத் திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், திருச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (27.11.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (27.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகளுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் இன்று (27.11.2024) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகத் தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுக்கான மாற்றுத்தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

மயிலாடுதுறையில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவுச் சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான தேர்வுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறும்என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவுச் சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான தேர்வுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறு என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Chance of rain in 25 districts Postponement of exams

இத்தகைய சூழலில் தான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 25 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் இன்று (27.11.2024) காலை 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.