Chance of rain in 20 districts; Maximum rainfall recorded in Tiruchendur

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் மிதமான அளவில் மழை பொழிந்து வருகிறது. மயிலாடுதுறையில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, புதுச்சேரியில் நகரப் பகுதிகள் என பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

Advertisment

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்செந்தூரில் 4 சென்டி மீட்டர் மழையும், சேலம் ஏற்காட்டில் 2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர், அரியலூர், புதுச்சேரி காரைக்காலில் மிதமான மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.