20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Chance of rain in 20 districts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களில் உள்ள ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (15.07.2024) காலை 10 மணிக்குள் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe