தமிழகத்தில் பரவலாக அப்போது மழைபொழிந்து வரும் நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின்படி தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.