தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில்16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஈரோடு, சேலம், தர்மபுரி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும், அதேபோல் புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரில்வானம் மேகமூட்டத்துடன்காணப்படும் என்றும்ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.