
தொடர்ச்சியாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னையில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பொழிந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.
சென்னையின் தேனாம்பேட்டை, மெரினா, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பொழிந்து வருகிறது. அதே போல் ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம், அண்ணா சாலை, அயனாவரம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட 15 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.