வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகளை அரசு மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, மதுரை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.