Chance of rain in 14 districts

Advertisment

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. டிசம்பர் 15, 16 ஆகி தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று மற்றும் நாளை தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாட்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழைக்கும், மிக கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிப்பின்படி நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், காரைக்கால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.