13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Chance of rain in 13 districts

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் தான் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகப் பரவலாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இது தொடர்பாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் இன்று (15.09.2024) வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தின் நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று (15.09.2024) இரவு 10 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதே போன்று கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe