Chance of rain in 10 districts ... Meteorological Center Warning!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை,தருமபுரி, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது. குமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் சென்னையில் மிதமான மழைபெய்யும்எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னையில் கோயம்பேடு,தி.நகர், வடபழனி, பாடி, அம்பத்தூர், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைபெய்துவருகிறது.