ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

 chance to Heavy rainfall in three districts

Advertisment

Advertisment

நாகை, கடலூர், தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில பகுதிகளில் மழை பொழிய வாய்ப்புள்ளது. அதேபோல் சூறாவளி காற்று வீசும் என்பதால்அடுத்த 24 மணிநேரத்திற்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக செய்யூரில் 7 சென்டி மீட்டர் மழையும், ராமேஸ்வரம்,மண்டபத்தில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.