Chance of heavy rain in Tamil Nadu, Puducherry today!

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் இன்று கனமழை பொழிய வாய்ப்புள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் திண்டுக்கல்லில் 10 சென்டிமீட்டர் மழையும், ஆர்.எஸ்.மங்கலம்-9 சென்டிமீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.