Published on 02/11/2021 | Edited on 02/11/2021

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், நாளைவரை (03.11.2021) தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி நாளன்று காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.