தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

Chance of heavy rain in Tamil Nadu

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய 5 மாவட்டஙகளில் இன்று மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.அதன்படி திண்டுக்கல், தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடஙகளில் 12 செ.மீ. முதல் 20 செ.மீ.வரை மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளையும் கனமழைபெய்ய வாய்ப்பு உள்ளது” என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain weather
இதையும் படியுங்கள்
Subscribe