Advertisment

‘கனமழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Chance of heavy rain Met Dept warning

ஃபெஞ்சல் புயல் சென்னைக்கு 190 கி.மீ. தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று (30.11.2024) பிற்பகல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கவுள்ளது. அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதோடு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்தகைய சூழலில் தான், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நள்ளிரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.

Advertisment

கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசியத் தேவையைத் தவிர இதர பணிகளுக்காக வெளியில் வருவதைத் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

சென்னை மாநகர பேருந்து சேவை வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை மெரினா கடற்கரை சாலை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணியுரிய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கையாக அப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மற்றொரு வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “இன்று (30.11.2024) காலை 10 மணிக்குள் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் பல இடங்களிலும், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும். இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் தீவிர கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டன. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர், கும்பகோணம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (30.11.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

cyclone Storm
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe