Chance of heavy rain in five districts!

Advertisment

அடுத்த 2 மணிநேரத்திற்குள்ளாக தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருப்பூர், நெல்லை, நீலகிரி,விழுப்புரம், சிவகங்கை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன்னியாகுமரி,திண்டுக்கல்லில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் கேரளாவில் பருவ மழை தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடலின் சில பகுதிகளில் ஏற்கனவே பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்க இருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.