Chance of heavy rain in Coimbatore and Nilgiris

கோவை, நீலகிரி பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்றால் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில்மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல்தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில்லேசானது முதல் மிதமான மழைக்குவாய்ப்பு இருக்கிறது. பலத்த காற்று வீசுவதால் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். அதிகபட்சமாக நீலகிரியில் 15 சென்டி மீட்டரும், அவினாசியில் 10 சென்டி மீட்டரும்,பந்தலூரில் 8 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment