Advertisment

இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Chance of heavy rain in 9 districts in Tamil Nadu!

Advertisment

தமிழ்நாட்டில் கனமழை நீடிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக குடவாசலில் 12 சென்டி மீட்டர் மழையும், பாலவிடுதி மற்றும் சேலத்தில் தலா 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

heavy rain Tamilnadu weather
இதையும் படியுங்கள்
Subscribe