Published on 22/10/2023 | Edited on 22/10/2023

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பின்படி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் எனவும், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.