தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த வகையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.