Chance of heavy rain in 15 districts of Tamil Nadu

பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட நேற்று அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது.

Advertisment

புயல் கரையை கடந்ததைத் தொடர்ந்து தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வரும் 15ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.