Chance of heavy rain in 15 districts; So far 26 people have lost their lives

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்காசி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisment

9 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக் கடலில் வரும் 9 ஆம் தேதி முதல் காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், இந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் அல்லது பருவமழையின் காரணமாக ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாக வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர்மேலாண்மை ஆணையம்அறிக்கை வெளியிட்டுள்ளது. இறந்த நபர்களது குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிவாரணம் அளித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.