Chance of heavy rain in 13 districts of Tamil Nadu

தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத்தெரிவித்துள்ளது.

Advertisment

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சைஆகிய 13 மாவட்டங்களில் இன்று(1.11.2023) கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 4 நாட்கள் வரை மழை பெய்யக் கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.