தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று நாளையும் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், இன்று தேனி, திண்டுக்கல், தஞ்சை, நாகை, அரியலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.